தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் பெண் துன்புறுத்தல்; தடுத்த 2 பெண்கள் உள்பட 6 பேர் மீது கும்பல் தாக்குதல்

உத்தர பிரதேசத்தில் பெண்ணை துன்புறுத்தியவர்களை தடுத்த 2 பெண்கள் உள்பட 6 பேர் மீது கும்பல் ஒன்று அடித்து தாக்குதல் நடத்தியது.

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தில் முசாபர்நகரில் விலாயத் நகர் பகுதியில் பெண் ஒருவரை ஆண்கள் சிலர் கும்பலாக துன்புறுத்தி உள்ளனர். இதனை சிலர் தடுத்து உள்ளனர்.

இதனை அடுத்து அவர்களை அந்த கும்பல் அடித்து தாக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி போபா நகர காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.