லக்னோ
உத்தர பிரதேசத்தில் ஆரையா நகரில் இருந்து கல்யாண்பூர் நகருக்கு சிலர் கார் ஒன்றில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் ஆவர். கார் ஓட்டுநருடன் சேர்ந்து மொத்தம் 10 பேர் பயணித்தனர்.
இந்த நிலையில், அவர்களுடைய கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. ஆனால், காரை உடனடியாக நிறுத்த முடியவில்லை. அந்த கார் அருகேயிருந்த குளத்தில் பாய்ந்தது. இதில் காரில் பயணித்த அனைவரும் நீருக்குள் மூழ்கினார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்து மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை தொடங்கினர். இதில், மொத்தமுள்ள 10 பேரில் 6 பேர் பாதுகாப்பாக உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும் அவர்களில் 4 பேர் பலியானார்கள். அவர்களில் 2 பேர் அந்த குடும்பத்தின் பெண்கள். ஒரு குழந்தை மற்றும் ஆண் ஒருவர் உயிரிழந்தனர்.
இதனை கான்பூர் திஹாத் காவல் கண்காணிப்பாளர் ஷ்ரத்தா நரேந்திர பாண்டே உறுதிப்படுத்தி உள்ளார். கார் ஓட்டுநரும், 9 பேரும் கல்யாண்பூரை சேர்ந்தவர்கள் ஆவர். குளத்தில் மூழ்கிய காரை மீட்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன என அவர் கூறினார்.