லக்னோ,
பைக் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்று நின்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோதியது.
உத்திரப்பிரதேசம் மாநிலம், பைக்கெளலி படேபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பிரஜாபதி (வயது 35). இவரது மனைவி முன்னி தேவி (வயது 30). நேற்று இந்த தம்பதியினர் பல்லியா மாவட்டம் மெளவில் உள்ள தங்களது வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ராஸ்ரா கோட்வாலி பகுதியின் கீழ் உள்ள கதியா இருப்புப்பாதை அருகே சென்று கொண்டிருந்தபோது வினோத் பிரஜாபதி பைக் கட்டுப்பாட்டை இழந்து உடனே பைக் அதிவேகமாக சென்று, ராஸ்ரா-மௌ வழித்தடத்தில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அவர்கள் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரந்து சென்றனர். காவல் துறையினர் அவர்களை உடனே மீட்டு சிகிச்சைக்காக ராஸ்ராவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் நேற்று மாலை அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்று ராஸ்ரா கோட்வாலி பொறுப்பாளர் யோகேந்திர பகதூர் சிங் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.