தேசிய செய்திகள்

பிரதமர் மோடி குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பிய நபர் கைது

உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் பவானிகர் கிராமத்தை சேர்ந்தவர் அனந்தகுமார் சுக்லா. இவர் பிரதமர் மோடி, உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு கருத்துகளை பரப்பியுள்ளார்.

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத்தின் புகைப்படங்களை அவதூறு போஸ்டர்களாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டர்கள் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கைது

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அனந்தகுமார் சுக்லாவை நேற்று கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.