தேசிய செய்திகள்

ஓணம் போனசாக ரூ.1.05 லட்சம்.. கேரளத்தில் அரசு மதுபான ஊழியர்களுக்கு அதிரடி சலுகை..!

கடந்த ஆண்டிலும் BEVCO ஊழியர்களுக்கு சாதனை அளவிலான ஓணம் போனஸ் வழங்கப்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநில மதுபானக் கழக (BEVCO) ஊழியர்களுக்கான ஓணம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது; இந்த ஆண்டும் போனஸ் தொகை ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது

ஓணம் பண்டிகை

கேரளத்தில் உள்ள அரசு பொதுத்துறை நிறுவனங்களில், ஊழியர்களுக்கு அதிக போனஸ் வழங்கும் நிறுவனமாக கேரள மதுபான கழகம் உருவெடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு மதுபான கழகம் ஊழியர்களுக்கு போனசாக ரூ.1 லட்சம் வழங்கியது. இந்த நிலையில் இந்த ஆண்டும் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. அதாவது ரூ.1.05 லட்சம் போனஸ் வழங்க அதன் நிர்வாக இயக்குனர் யோகேஷ் குப்தா அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

போனஸ்

மேலும் அவர் கூறுகையில், ஓணம் முன் பணமாக ரூ.50 ஆயிரம் ஊழியர்களுக்கு வழங்கப்படும். இது ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 7 தவணைகளாக பிடித்தம் செய்யப்படும். தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.6,500 ஊக்கத் தொகை, தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்பட்ட பாதுகாவலர்களுக்கு ரூ.13 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.