புதுடெல்லி,
மத்திய ஆசியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் தருவாயில் உள்ளது. இந்த சூழலில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ இன்று இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.
இந்தியாவில் மார்கோ ரூபியோ 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மார்கோ ரூபியோ இன்று பிற்பகல் 2.15 மணிக்கு மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மார்கோ ரூபியோ கலந்து கொள்கிறார். தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து, இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.