தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்: சாலை விபத்தில் 11 பேர் பலி

பைசோத் என அழைக்கப்படும் பகுதியில், லாரி ஒன்று பிரேக் பிடிக்காமல் மற்ற வாகனங்கள் மீது மோதியுள்ளது என கூறப்படுகிறது.

மிர்சாபூர்

உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் நகரில் திராமந்த்கஞ்ச் வேலி பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர். பைசோத் என அழைக்கப்படும் பகுதியில், லாரி ஒன்று பிரேக் பிடிக்காமல் மற்ற வாகனங்கள் மீது மோதியுள்ளது என கூறப்படுகிறது.

தொடர்ந்து முன்னே சென்றுள்ளது. அது மற்றொரு லாரி மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் அந்த லாரிகள் இரண்டுக்கும் இடையில் கார் ஒன்று சிக்கி கொண்டது. மற்றொரு கார் தீப்பிடித்து கொண்டது. இந்த விபத்துகளில் 11 பேர் பலியாகி உள்ளனர். இதனால், அந்த பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து வாகன போக்குவரத்து சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.