தேசிய செய்திகள்

உத்தரபிரதேச 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு : காலை 9 மணி நிலவரம் வெளியீடு

இன்று 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ,7 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று 4-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி, உ.பி.யில் 9 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது .வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்நிலையில் 4-ம் கட்ட தேர்தல் வாக்குபதிவில் ,காலை 9 மணி நிலவரப்படி 9.10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன .