தேசிய செய்திகள்

உத்தர பிரதேசம்: சாலை விபத்தில் 5 பேர் பலி; 17 பேர் காயம்

இதுபற்றி லக்னோ சரக ஐ.ஜி. கிரண் கூறும்போது, அதி விரைவாக சென்றது விபத்திற்கான காரணம் என கூறினார்.

லக்னோ

உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் பலியானார்கள். 17 பேர் காயம் அடைந்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் சாலையில் சென்ற டிராக்டர் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில், 5 பேர் பலியானார்கள். 17 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

விவசாய பணி

இதுபற்றி லக்னோ சரக ஐ.ஜி. கிரண் கூறும்போது, அதி விரைவாக சென்றது விபத்திற்கான காரணம் என கூறினார். தவிர, விவசாய பணிக்கான வாகனத்தில் பயணிகள் ஏற்றி செல்லப்பட்டது சட்ட விரோதம். இதுதொடர்பாக ஏற்கனவே கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன என்றார்.

போக்குவரத்து பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இதுபற்றி விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

SCROLL FOR NEXT