லக்னோ,
உத்தரபிரதேசத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 24 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரபிரதேசத்தின் கவுசாம்பி மாவட்டம் பிப்ரி பகுதியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 24 பேர் படுகாயமடைந்தனர். மேலும், 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.