தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தின் ஜேவார் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

ஜேவார் விமான நிலையத்திற்கு 'நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம்' எனப் பெயர் சூட்டப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

லக்னோ.

உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகரில் உள்ள ஜேவார் சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சூட்டுவதற்கான தீர்மானத்திற்கு, உத்தர பிரதேச முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய யோகி ஆதித்யநாத், ஜேவார் விமான நிலையத்திற்கு அதிகாரப்பூர்வமாக 'நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம்' எனப் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

ஒரு அரசாங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகள் தொடர்ச்சியான பொது சேவையை நிறைவு செய்த பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் உத்தர பிரதேச அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT