ஹரித்வார்,
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பேருந்து கவிழ்ந்ததில் 11 பயணிகள் காயமடைந்தனர் என்று அம்மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மாலை 6:30 மணியளவில் நசிமாபாத்தில் இருந்து ஹரித்வாருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 57 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது பேருந்து ஓட்டுநர் தீடீரென பேருந்தை நிறுத்த முயன்றபோது பேருந்து கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். எனினும் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீ.ஓ. சதர் நிஹாரிகா செம்வால் தெரிவித்தார்.