டேராடூன்
உத்தராகண்டில் கார் மீது லாரி கவிழ்ந்து 4 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தராகண்டின் டேராடூன் நகரில் மொஹப்வாலா பகுதியருகே டேராடூன்-டெல்லி நெடுஞ்சாலையில் நேற்று மதியம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த கார் மீது விரைவாக வந்த லாரி ஒன்று கவிழ்ந்தது.
இந்த விபத்தில், லாரியின் அடியில் கார் சிக்கிக்கொண்டது. இதில், கார் ஓட்டுநர் மற்றும் ஒரே குடும்பத்தின் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த தகவல் அறிந்து போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காயமடைந்த நபர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், அந்த 4 பேரும் பலியாகி விட்டனர் என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில், 6 வயது குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.