டேராடூன்
உத்தரகாண்ட் மாநிலத்தில் 300 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து 7 பெண்கள் உள்பட 8 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டம் ரிகானிகால் நகரில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற 12 பெண்கள் ஒரு வாகனத்தில், பங்கல்வார் கிராமம் நோக்கி வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கல்வாரி கிராமம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் சிக்கி, 7 பெண்கள், டிரைவர் என 8 பேர் பலியானார்கள். 4 பெண்கள் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு, மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோரும் வருத்தம் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அதனுடன் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.