தேசிய செய்திகள்

உத்தராகண்ட் கவர்னரின் ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் அவசர தரையிறக்கம்

ஸ்ரீநகரில் உள்ள போலீஸ் விருந்தினர் இல்லத்திற்கு, கவர்னர் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார்.

ஸ்ரீநகர்

உத்தராகண்ட் கவர்னரான ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மித் சிங் இன்று ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.

அப்போது அவருடைய ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு மற்றும் காஷ்மீரின், ஸ்ரீநகரில் உள்ள ஹெலிபேடில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஸ்ரீநகரில் உள்ள போலீஸ் விருந்தினர் இல்லத்திற்கு, கவர்னர் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். இதனை பாவ்ரி நகர போலீசார் தெரிவித்து உள்ளனர். அதற்கு முன்பு, சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குர்மித் சிங், மகளிருக்கான தன்னுடைய வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.