வந்தே பாரத்  
தேசிய செய்திகள்

பெங்களூரு-மும்பை இடையே இன்று முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில் சேவை தொடக்கம்

ரெயில் சேவையை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கொடிய சைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

பெங்களூருவில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு உதயன் எக்ஸ்பிரஸ் தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூரு-மும்பை இடையே படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இந்த புதிய ரெயில் சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்க உள்ளது.

பெங்களூரு பையப்பனஹள்ளியில் உள்ள எஸ்.எம்.வி.டி. ரெயில் முனையத்தில் இருந்து பெங்களூரு-மும்பை இடையிலான வந்ரே பாரத் படுக்கை வசதிகளுடன் கூடிய ரெயில் இன்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு செல்ல உள்ளது. இந்த ரெயில் சேவையை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கொடிய சைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

இதில், மத்திய மந்திரிகள் குமாரசாமி, பிரகலாத் ஜோஷி, ஷோபா, சோமண்ணா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயிலில் ஒட்டு மொத்தமாக 16 பெட்டிகள் உள்ளன. பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இந்துப்பூர், தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல், ராய்ச்சூர், கிருஷ்ணா, யாதகிரி, கலபுரகி, சோலாப்பூர், புனே, கல்யாண் வழியாக மும்பை யில் உள்ள சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்துக்கு செல்ல உள்ளது.

இன்று ஒருநாள் மட்டும் நண்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு, நாளை காலை 6.15 மணிக்கு அந்த ரயில் மும்பையை சென்றடைய உள்ளது. வரும் 3 ஆம் தேதி முதல் தினமும் பெங்களுர் பையப்பனஹள்ளியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 11.55 மணியளவில் மும்பையை சென்றடைய உள்ளது.

SCROLL FOR NEXT