தேசிய செய்திகள்

வேலூர் விமான நிலையம் 6 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்: மத்திய மந்திரி உறுதி

மத்திய மந்திரி ராம்மோகன் நாயுடுவை டெல்லியில் அவரது அலுவலகத்தில் தே.மு.தி.க. எம்.பி. எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய 6 விமான நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. வேலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட விமான நிலையம் 98 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

கோரிக்கை மனு

இந்த பணி களை விரைந்து முடித்து வேலூர் விமான நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தே.மு.தி.க. எம்.பி. எல்.கே.சுதீஷ், மத்திய விமான போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவை டெல்லியில் அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து வலியுறுத்தினார்.

உடனடியாக மத்திய மந்திரி, வேலூர் விமான நிலையத்தின் தற்போதைய நிலை குறித்து அதி காரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 'அடுத்த 6 மாதத்துக்குள் வேலூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என மத்திய மந்திரி உறுதி அளித்தார்.

இந்த உத்தரவாதத்தை வழங்கியதற்காக எல்.கே.சுதீஷ், மத்திய மந்திரிக்கு நன்றி தெரிவித்தார்.