தேசிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் பிசி சாக்கோ கட்சியில் இருந்து விலகல்

கேரள சட்டமன்ற தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், பி.சி சாக்கோ காங்கிரஸில் இருந்து விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிசி சாக்கோ, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி விட்டதாகவும் பிசி சாக்கோ தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.பியான பிசி சாக்கா, கேரள காங்கிரசின் முக்கிய முகமாக அறியப்பட்டவர். கேரளாவில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிசி சாக்கோ கட்சியில் இருந்து விலகியிருப்பது கேரள காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.