தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரே நியமிக்கும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மசோதாவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்துள்ளது. மேலும், சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள் வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள காலத்தில் துணைவேந்தர் நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.