டெல்லி,
வங்காளவிரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள இந்திய யூனியன் பிரதேசம் அந்தமான் நிகோபார் தீவுகள். இந்த யூனியன் பிரதேசத்தில் பல்வேறு தீவுகள் உள்ளன.
இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நாளை அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு செல்ல உள்ளார். தலைநகர் ஸ்ரீ விஜயபுரம் செல்லும் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அங்குள்ள செல்லுலார் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர், சவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையையும் பார்வையிடுகிறார்.
இதையடுத்து பயணத்தின் 2வது நாளில் ஸ்ரீவிஜயபுரத்தில் உள்ள பிளாக் பாயிண்ட்டில் தேசிய கொடியை ஏற்றுகிறார். மேலும், இந்த பயணத்தின்போது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். 2 நாட்கள் பயணத்திற்குப்பின் ஞாயிற்றுக்கிழமை துணை ஜனாதிபதி டெல்லி திரும்புகிறார்.