கவுகாத்தி,
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாட்கள் பயணமாக அசாம் சென்றுள்ளார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன். இவர் 2 நாட்கள் பயணமாக அசாம் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் அசாம் தலைநகர் கவுகாத்தி சென்றார். அங்கு அவரை முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சர்மா, கவர்னர் லக்ஷ்மன் பிரசாத் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றனர்.
இதையடுத்து கீதாநகர் கல்லூரி பொன்விழாவில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் ஸ்ரீமந்த சங்கரதேவ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அவர் நாளை கவுகாத்தில் உள்ள காமாக்கியா கோவிலில் வழிபாடு செய்கிறார். மேலும், கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
அசாம் பயணத்தை நாளை நிறைவு செய்யும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கிருந்து மேகாலயா செல்கிறார்.