ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜலவார் மாவட்டம் நய டலப் கிராமத்தில் நேற்று மதியம் மின்கம்பங்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் சென்றுகொண்டிருந்தது.
மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் டிராக்டரில் சென்றனர். கிராமத்தில் உள்ள தெருவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அங்கிருந்த பெட்டிக்கடைக்குள் புகுந்தது. அப்போது பெட்டிக்கடைக்கு மிட்டாய் வாங்க வந்த 2 சிறுமிகள் மீது டிராக்டர் மோதியது. இந்த சம்பவத்தில் 2 சிறுமிகளும் படுகாயமடைந்தனர். விபத்து நடைபெற்ற உடன் டிராக்டரை ஓட்டி வந்த இளைஞர் மற்றும் அதில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
இதையடுத்து, டிராக்டர் மோதியதில் படுகாயமடைந்த 2 சிறுமிகளையும் மீட்ட கிராமத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள டிராக்டர் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் . இந்த விபத்து குறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.