புதுடெல்லி,
வியட்நாமின் பு கியூக் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் 32 பேர் ஒரே படகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தமிழகத்தை சேர்ந்த 10 பேர், கர்நாடகாவை சேர்ந்த 5 பேர், கேரளாவை சேர்ந்த 2 பேர் என சுற்றுலாப் பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
வியட்நாம் படகு விபத்து காலை 10.30 மணியளவில் நடந்துள்ளது. படகு விபத்தில் 32 பயணிகள், ஊழியர்கள் சிக்கி உள்ளனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 18 பயணிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் 1800 309 3793 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வியட்நாம் படகு விபத்து வருத்தமளிக்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
வியட்நாமில் இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்து வருத்தமளிக்கிறது; விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கடலில் மாயமான இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.