கேரளாவில் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றது. இதையடுத்து, கேரளாவின் அடுத்த முதலவரை தேர்வு செய்வதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியது. நீண்ட இழுபறிக்கு பிறகு விடி சதீஷனை முதலமைச்சராக காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது.
இதையடுத்து நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றக் குழு தலைவராக விடி சதீஷன் தேர்வு செய்யப்பட்டார். வரும் திங்கட்கிழமை பதவியேற்புக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.