தேசிய செய்திகள்

தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் - நிர்மலா சீதாராமன்

விஜய், யார் வாக்குகளை பறிக்கப்போகிறார் என்பதுதான் கேள்வியாக இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் விஜய்யின் தவெக, முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. விஜய்யும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில், தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தனியார் ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;

"தேர்தலில் தவெக தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஆனால் யார் வாக்குகளை அவர் பறிக்கப்போகிறார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. தமிழக அரசியலில் பெண்களுக்கு சக்திவாய்ந்த குரல் இருக்கிறது. விஜய் திமுக வாக்குகளையும், பெண்களையும் தன் பக்கம் இழுக்கப்போகிறாரா என்பதுதான் கேள்விக்குறி."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.