புதுடெல்லி,
விஜயதசமி திருநாளையொட்டி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
விஜயதசமி திருநாள் தனிச்சிறப்பு வாய்ந்தது. ராவணனை பகவான் ராமர் வென்றதன் அடையாளமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. ராமர் தர்மம் மற்றும் நன்னடத்தையின் உருவகமாக போற்றப்படுகிறார். அதர்மத்தையும் அநீதியையும் தர்மமும் நீதியும் வென்றதைக் கொண்டாடும் திருநாளாக விஜயதசமி விளங்குகிறது.
இந்திய கலாசாரம் ஒழுக்கம் மற்றும் கடமை உணர்வு ஆகிய உயரிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த நன்னாளில், நமது கலாசார மரபுகளின் உன்னதமான கொள்கைகளைப் பின்பற்றவும், அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தையும், வளர்ச்சியடைந்த இந்தியாவையும் உருவாக்குவதற்குப் பங்களிக்கவும் நாம் உறுதியேற்போம்.
இந்தப் புனித திருநாளில், நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், நல்ல உடல்நலத்துடனும், நலமுடனும் வாழ எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.