பெங்களூரு,
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் ஒரு வீடியோ வெளியானது. அதில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் போனில் பேசிக்கொண்டே தனது ஆடைகளை கழற்றுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அந்த வீடியோவில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி யார் என்ற பரபரப்பு நிலவியது.
இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது அந்த வீடியோவில் இருப்பது கர்நாடக மாநில தொழிலல் துறை பாதுகாப்புப் படையை சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
பெண் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தனது நண்பரான ரவுடி சாய்குமார் என்பவருடன் வீடியோ காலில் பேசிய போது ஆடைகளை கழற்றியது தெரியவந்தது. இதையடுத்து பெண் இன்ஸ் பெக்டர், சாய்குமார் மற்றும் சிலர் மீது கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனைகள் பெற்று வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வீடியோவில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் புகார் அளித்து விட்டு தற்போது விடுமுறையில் சென்று விட்டார். இந்த வீடியோ கடந்த 2024-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ரவுடிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெண் இன்ஸ்பெக்டரின் நண்பரான சாய்குமார் துமகூரு மாவட்டம் குனிகல் பகுதியை சேர்ந்தவர்.
இந்த வீடியோ எடுத்த காலக்கட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஹிண்டல்கா மத்திய சிறையில் பணியில் இருந்தார். அந்த சிறையில் தான் சாய்குமாரும் அடைக்கப்பட்டு இருந்தார். அவர்சிறையில் இருந்த போது இன்ஸ்பெக்டர், ரவுடி தொடர்பு கொண்டு ஆபாசமான அழைப்புகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சாய்குமார் அந்த அழைப்பை பதிவு செய்து கொண்டு அதை சமீபத்தில் கசிய விட்டுள்ளார்.
மேலும் ரவுடி சாய்குமாரும், பெண் இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்து உள்ளார். அதில் சிறைக்குள் தன்னிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தொலைபேசிகள், மது பானம் மற்றும் பிற ஆடம்பர பொருட்களை அவர் வழங் கியதாக குற்றம் சாட்டி உள்ளார். அதே கைபேசி தான் வீடியோ அழைப்புகளை பதிவு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சிறையில் நடக்கும் முறை கேடுகளை அம்பலப்படுத்துபவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்படும் என மிரட்டப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அவரது புகாரின் அடிப்படையில் பெண் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடை பெற்று வருகிறது. இதற்கிடையே சிறை அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளுடன் ஒரு வீடியோ இன்ஸ்டா கிராமில் பகிரப்பட்டது.
அந்த பதிவை தொடர்ந்து சிறை அதிகாரிகள் பெலகாவி சிஇஎன் போலீசில் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பெண் போலீஸ் வீடியோ வேகமாக பரவி இன்ஸ்பெக்டர் ஆபாச வருவதால் கர்நாடகாவில் பரபரப்பு நிலவி வருகிறது.