தேசிய செய்திகள்

வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் செழிப்பிற்காக வாக்களியுங்கள்! - பியூஸ் கோயல்

தமிழக சட்டசபை தேர்தல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய மந்திரி பியூஸ் கோயல் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இன்று தமிழ்நாட்டுக்கு தனது விதியை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தகுதி பெற்ற வாக்காளர்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து, தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

ஒவ்வொரு வாக்கிற்கும் தமிழ்நாட்டின் பிரகாசமான மற்றும் மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்கும் வலிமை உண்டு. உங்கள் வாக்கை மதிப்புமிக்கதாக்குங்கள்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.