மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின்கீழ் சமூகநலத் திட் டங்கள் மற்றும் நிதியுதவி பெற புகைப்பட வாக்காளர் அடை யாள அட்டை எண்ணும், பயோமெட்ரிக் சரிபார்ப்பும் அவசி யம் என்று அத்துறையின் மந்திரி ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியிருந்தார்.அதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஆதாருக்கு பதிலாக, வாக்காளர் அட்டை அடிப்படையில் திட்ட பயனாளிகள் தீர்மானிக்கப்படுவர் என்று மோடி அரசின் மந்திரி கூறுவது பெரும் சதி. மிகவும் ஆழமான சதி நடக் கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் கோடிக்கணக்கானோர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.
எப்போதும் பா.ஜனதா ஆதரவா ளர்கள் பெரும்பான்மையாக இருக்கும்வகையில் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. உங் களுக்கு நலத்திட்டம் கிடைக்குமா, கிடைக்காதா என்பது அதே பட்டியலை வைத்துத்தான் தீர்மானிக்கப்படும்.இது, வாக்கு திருட்டு மட்டுமல்ல, உரிமை திருட்டு. இதை அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.