புதுடெல்லி,
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. முதல்கட்ட மாக பீகாரிலும், 2-ம் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் இப்பணி நடந்தது.
இந்நிலையில், 3-ம்கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் திருத்தப்பணி நடக்கிறது. அங்கு 30-ந் தேதி திருத்தப்பணி தொடங்குகிறது. மேற்கண்ட மாநிலங்களில் 36 கோடியே 73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 3 கோடியே 94 லட்சம் வாக்குச்சாவடிநிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவார்கள்.