தேசிய செய்திகள்

வாக்குச்சீட்டு முறை வேண்டும், மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துக: கார்கே வலியுறுத்தல்

வாக்குப்பதிவு இயந்திரங்களை நீக்கி விட்டு, பாரம்பரிய வாக்குச்சீட்டு முறையை திரும்ப கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கலபுரகி

வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்றும் மகளிர் இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும் என்றும் கார்கே வலியுறுத்தி உள்ளார்.

கர்நாடகாவின் கலபுரகி நகரில் காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, பல்வேறு விசயங்களை குறிப்பிட்டார். தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை பற்றி அவர் பேசினார்.

சட்டப்பிரிவு 16

அவர், தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் பிற தேர்தல் ஆணையாளர்கள் சட்டம், 2023, பிரிவு 16 பற்றி குறிப்பிடும்போது, அவற்றை பயன்படுத்தி அரசாங்கம் தவறுகளை செய்கிறது என குற்றச்சாட்டாக கூறினார். அதற்காகவே இந்த சட்டப்பிரிவு நிறைவேற்றப்பட்டு உள்ளது என்றும் அப்போது அவர் கூறினார்.

இச்சட்டம் திரும்பப்பெறப்பட வேண்டும் என பா.ஜ.க.வை நாங்கள் கேட்டு கொள்கிறோம். இது, தேர்தல் ஆணையாளருக்கு பாதுகாப்பை தருவதுடன், தவறு செய்வதற்கு அவருக்கு இடமளிக்கிறீர்கள் என கூறியதுடன், அவருக்கு ஏன் இந்த அதிகாரம் அளிக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பினார்.

வாக்குச்சீட்டு முறை

நாட்டில் தலைமை நீதிபதிக்கு மற்றும் இந்திய ஜனாதிபதிக்கு கூட இந்த உயரிய அதிகாரம் இல்லை. ஆனால், தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமாருக்கு அதிக அதிகாரம் உள்ளது. அதனால், அவர் தவறு செய்கிறார். அவரை நீங்கள் பயன்படுத்தி கொள்கிறீர்கள்.

இதன்பின்னர் மன்னிக்கவும் செய்கிறீர்கள் என்றார். தொடர்ந்து அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நீக்கி விட்டு, அவற்றுக்கு பதிலாக பாரம்பரிய வாக்குச்சீட்டு முறையை திரும்ப கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT