தேசிய செய்திகள்

‘எங்களை கண்காணிக்கிறார்கள்’; கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஆவேசம்

தலைநகர் டெல்லியில் போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்து உள்ளன.

புதுடெல்லி,

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மூலம் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் வாக்குகளை திருடி விட்டதாக 'இந்தியா' கூட்டணி கட்சி மற்றும் கரப்பான்பூச்சி உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி கடந்த 6-ந் தேதியில் இருந்து போராட்டங்கள் தலைநகர் டெல்லியில் விஸ்வரூபம் எடுத்து உள்ளன.

இந்த நிலையில், டெல்லி போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஜார்கண்டில் இருந்து புறப்பட்டபோது தங்களை சிலர் பின்தொடர்ந்ததாக மாநில கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஒருங்கிணைப்பாளர் குஷ்பூ சவுத்ரி ஆவேசத்துடன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'நான் ரெயிலில் ஏறியதும் 8 பேர் சாதாரண உடையில் என்னை பின்தொடர்வதையும், வீடியோ எடுப்பதையும் பார்த்தேன். இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரும் என்னிடம் தெரிவித்தார். ரெயில் உத்தரபிரதேசம் சென்றதும் என்னை அவர்கள் கைது செய்யலாம் என கூறினார்' என்று தெரிவித்தார். மேலும் அதிகாலை 3.30 மணியளவில் பொகாரோ ரெயில் நிலையத்தில் இறங்கி மற்றொரு ரெயில் மூலம் ராஞ்சி திரும்ப முடிவு செய்ததாக அவர் கூறினார். இதே குற்றச்சாட்டை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மொயின் கானும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT