தேசிய செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கிய இந்திய கப்பல் கேப்டன் மாரடைப்பால் உயிரிழப்பு

கடலில் நீண்ட நாட்கள் இருந்தது மற்றும் மன அழுத்தம் காரணமாக கடந்த 18-ம் தேஎதி ரஞ்சன் சிங்கின் உடல்நிலை திடீரென மோசமடைந்தாக கூறப்படுகிறது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராகேஷ் ரஞ்சன் (வயது 47) இவருக்கு மனைவி மற்றும் பிரவார் (20) ஓம் (16) 2 மகன்கள் உள்ளனர். ராகேஷ் கடந்த 26-ம் ஆண்டுகளாக வணிக கப்பல் படை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த பிப்.2-ம் தேதி அன்று ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.எஸ்.பி. அவானா என்ற கப்பலில் கேப்டனாக பணியில் சேர்ந்தார். ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து ஒரு எண்ணை கப்பலை வெளியே செலுத்தும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

கடந்த 26-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையே போர் ஏற்பட்டதால் ஹார்முஸ் நீரினை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அந்த வழியாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 20 நாட்களாக ரஞ்சன் அந்த கப்பலில் சிக்கி இருந்தார்.

போர் காரணமாக அந்த கப்பல் கடலில் தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கேப்டன் ரஞ்சன் சிங் உட்பட சுமார் 35 பணியாளர்களுடன் அந்த கப்பல் துபாய் கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட 60 கி.மீ தொலைவில் சுமார் 20 நாட்கள் வரை நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது.

கடலில் நீண்ட நாட்கள் இருந்தது மற்றும் மன அழுத்தம் காரணமாக கடந்த 18-ம் தேஎதி ரஞ்சன் சிங்கின் உடல்நிலை திடீரென மோசமடைந்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கப்பலில் இருந்த அதிகாரிகள், ஒரு வான்வழி ஆம்புலன்சை கோரி துபாய் விமான போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். போர் சூழல் காரணமாக தேவையான அனுமதியை உரிய நேரத்தில் பெற முடியவில்லை.

இதை தொடர்ந்து அவர் கப்பலில் இருந்து படகு மூலம் துபாய் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ரஞ்சன் சிங் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது மரணத்திற்கான சரியான காரணம் எங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றும் நேரத்தை வீண்டடிக்கபடாமல் உஅனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருந்தால் அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும் அவரது உடலை விரைவாக தாயகம் கொண்டு வர உதவ வேண்டும் என இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேப்டன் ரஞ்சன் சிங்கின் நெருங்கிய நண்பரும் 28 ஆண்டுகள் வணிக கடற்படையில் பணியாற்றிய மூத்த வீரருமான கேப்டன் சஞ்சீவ் குமார், உரிய நேரத்தில் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் கிடைத்திருந்தால் அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று தெரிவித்தார்.

ரஞ்சன் சிங்கின் குடும்பத்திற்கு நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு அரசாங்கத்தையும் கப்பல் நிறுவனத்தையும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

தற்போது, ரஞ்சன் சிங்கின் உடல் துபாயில் உள்ள ஷேக் ரஷீத் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது.