புதுடெல்லி,
இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடி-மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் முன்னிலையில் இந்தியா-மலேசியா இடையே தொழில், இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகளில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
டெல்லியில் மலேசிய பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியாவும் மலேசியாவும் இணைந்து பொருளாதார மேம்பாட்டை வெற்றிகரமாக உருவாக்குவோம். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஒருங்கிணைந்து செயல்படுவோம். இரு நாடுகளுக்கிடையே உணவு பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.