தேசிய செய்திகள்

டெல்லியில் நமது குரலைப் பாதுகாக்க வேண்டும் ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரேவந்த் ரெட்டி கடிதம்

முன்னதாக, மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு் ரேவந்த் ரெட்டி கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஒன்றிணைய வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கடிதம் எழுதி உள்ளார். அதில்,

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில், தொகுதி மறுவரையறை அபாயத்தை முன்கூட்டியே உணர்ந்து தென்னிந்திய தலைவர்களை ஒன்றிணைத்த முதல் தலைவர்களில் நீங்கள் ஒருவராக இருந்தீர்கள்.

அரசியல் உரிமைகள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்த தாக்குதலுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து, டெல்லியில் நமது குரலை பாதுகாக்க வேண்டும்.

இந்த முக்கியமான நாளில், பாபாசாகேப் அம்பேத்கரின் "Educate, Agitate, and Organise" என்ற முழக்கத்தில் இருந்து நாம் உத்வேகத்தைப் பெற்றுக்கொள்வோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தென்னிந்திய மாநிலங்கள் ஏற்கனவே போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், ரேவந்த் ரெட்டியின் இந்தக் கடிதம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, மக்களவைத் தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கடிதம் எழுதி உள்ளார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து தென்னிந்திய மாநிலங்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.