புதுடெல்லி,
வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 15 நாட்கள் நாடு முழுவதும் நடத்திய சோதனையில் ரூ.350 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க மத்திய அரசு தீவிர நட வடிக்கை எடுத்து வருகிறது. போதையில்லாத பாரதத்தை படைப்பதற்காக உள்துறை மந்திரி அமித்ஷா உறுதி பூண்டுள்ளார். இதன் பேரில் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வரு வாய் புலனாய்வு இயக்குனரகம் நாடு முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான சோதனையை முடுக்கி விட்டது. இதன்படி கடந்த 2-ந்தேதி பஞ் சாப் மாநிலம் லூதியானா அருகே சந்தேகத்துக்கு இடமான வாகனம் ஒன்றை அதிகாரிகள் சோதனையிட்டதில் 69 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 3-ந் தேதி உளவுத்துறை தகவலின் படி கோரக்பூர் ரெயில் நிலையத்தில் அமர்நாத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பொதுப்பெட்டியில் சந்தேகத்துக்கு இடமாக 3 பேர் பிடிபட்டதில் அவர்களி டமிருந்து 5 கிலோ 'சரஸ்' என்கிற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதேபோல் பாட்னா அருகே நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஒரு லாரியை துரத்திச் சென்று மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில் 140 கிலோ கஞ்சா சிக்கியது. ராய்ப்பூர் அருகே உள்ள பழைய தம்தாரி சாலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த 2 லாரிகளில் மறைத்து வைக்கப்பட்ட 376 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னதாக கடந்த மாதம் 26-ந் தேதி ராய்ப்பூர் அருகே லாரியில் 124 கிலோ பிடிபட்டது. இதுபோன்ற நடவடிக்கையில் கடந்த 15 நாட்களில் மொத்தம் 740 கிலோ உள்நாட்டு கஞ்சா மற்றும் உயர் ரக வெளிநாட்டு கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.350 கோடி ஆகும். இந்த நடவடிக்கைகளில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வருவாய் புலனாய்வுத்து றையின் போதைப்பொருளுக்கு எதிரான இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.