தேசிய செய்திகள்

‘நீர்நிலைகளை பாதுகாக்கத் தவறினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்’ - சுப்ரீம் கோர்ட்டு

ஈரநிலங்களின் எல்லைகளை வரையறுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

நீர்நிலைகள் பராமரிப்பு குறித்து பறவை ஆர்வலர் ஆனந்த் ஆர்யா மற்றும் வனசக்தி தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த மனு, நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

“நீர்நிலைகள் மதிப்புமிக்கவை. குடிநீருக்கு ஆதாரமாக இருப்பவை. நீர்நிலைகளை தொடர்ந்து பாதுகாக்காமல் இருப்பதன் பின்விளைவுகளை இந்த கோர்ட்டு வேடிக்கை பார்க்காது. கண்டு கொள்ளாமல் இருக்காது.

இந்த நோக்கத்தை நிறைவேற்ற அனைத்து மாநிலங்களும் நீர்நிலைகளில் நேரடி களஆய்வு செய்ய வேண்டும். ஈரநிலங்களின் எல்லைகளை வரையறுக்க வேண்டும். இதை 4 மாதங்களில் செய்ய வேண்டும்.”

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT