தேசிய செய்திகள்

ஹிமந்தா பிஸ்வா மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் - ராகுல் காந்தி ஆவேசம்

126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபைக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

திஸ்பூர்,

126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபைக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிஸ்வாக் சியாரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

அசாமின் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்தியாவில் மிகவும் ஊழல் மிகுந்த முதல்-மந்திரி ஆவார். அவர் வெறுப்பை மட்டுமே பரப்புகிறார். அவரால் நிம்மதியாக இரவில் உறங்க முடியவில்லை. ஏனென்றால் காங்கிரசின் சிங்கம் தன்னை சிறையில் அடைக்க போகிறது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஹிமந்தா பிஸ்வா கை கூப்பி மன்னிப்பு கேட்டாலும் அவரை விட மாட்டோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர் எத்தகைய ஆர்ப்பாட்டங்களையும், நாடகங்களையும் இப்போதே செய்து கொள்ளட்டும். ஏனென்றால் நாங்கள் அவ்வளவு எளிதாக அவரை தப்பவிட அனுமதிக்கப் போவதில்லை.

அசாம் மக்களை ஒண்றிணைக்க பாடுபட்ட பாடகர் ஜூபின் கார்க்கின் தத்துவத்தை போன்றதே காங்கிரஸ் கட்சி தத்துவமாகும்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.