தேசிய செய்திகள்

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் - விவரம்

தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன.

கொல்கத்தா,

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதேவேளை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபையின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை இங்கு காண்போம்.

மேற்கு வங்காளம்; (294 தொகுதிகள் - பெரும்பான்மை 148 தொகுதிகள்)

போல் ஆப் போல்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்

திரிணாமுல் காங்கிரஸ் - 131 முதல் 151 தொகுதிகளில் வெற்றி

பாஜக - 137 முதல் 157 தொகுதிகளில் வெற்றி

காங்கிரஸ் - 1 முதல் 3 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0

மெட்ரிக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்

திரிணாமுல் காங்கிரஸ் - 125 முதல் 140 தொகுதிகளில் வெற்றி

பாஜக - 146 முதல் 161 தொகுதிகளில் வெற்றி

காங்கிரஸ் - 0

மற்றவை - 6 முதல் 10 தொகுதிகளில் வெற்றி

பி-மார்கியூ நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகள்

திரிணாமுல் காங்கிரஸ் - 118 முதல் 138 தொகுதிகளில் வெற்றி

பாஜக - 146 முதல் 161 தொகுதிகளில் வெற்றி

காங்கிரஸ் - 6 முதல் 10 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0

ஜேவிசி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்

திரிணாமுல் காங்கிரஸ் - 131 முதல் 152 தொகுதிகளில் வெற்றி

பாஜக - 138 முதல் 159 தொகுதிகளில் வெற்றி

காங்கிரஸ் - 0 முதல் 2 தொகுதிகளில் வெற்றி

மற்றவை - 0 முதல் 2 தொகுதிகளில் வெற்றி

சாணக்யா ஸ்டிராட்டர்ஜி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள்

திரிணாமுல் காங்கிரஸ் - 130 முதல் 140 தொகுதிகளில் வெற்றி

பாஜக - 150 முதல் 160 தொகுதிகளில் வெற்றி

காங்கிரஸ் - 0

மற்றவை - 6 முதல் 10 தொகுதிகளில் வெற்றி