மேற்கு வங்காளத்தில் இன்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. 142 தொகுதிகளுக்கு நடைபெற்ற 2ம் கட்ட தேர்தலில் 91.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேற்குவங்காளத்தில் 2ம் கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. 142 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது
மேற்கு வங்காளத்தில் இன்று நடைபெற்று வரும் 2ம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 89.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் இன்று நடைபெற்று வரும் 2ம் கட்ட தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 61.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்காள தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மாநிலம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
விரிவான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.100 சதவீதம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயரமான கட்டிடங்களில் வசிப்பவர்களும் கூட வாக்களிக்க வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்.
மத்திய ஆயுதக் காவல் படைகள் உரிய முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன; அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு முற்றிலும் அமைதியாக நடைபெற்று வருகிறது; எங்கிருந்தும் எவ்விதப் புகார்களும் வரவில்லை”என்றார்
மேற்கு வங்காள 2-வதுகட்ட சட்டமன்ற தேர்தலில் 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் மோதல் வன்முறை நடைபெற்ற போதிலும் பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 39.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தலில் 142 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் சில இடங்களில் மோதலும் வெடித்துள்ளது. சப்ரா, சந்திப்பூர் மற்றும் பாநகர் ஆகிய இடங்களில் வன்முறை, மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹத்ரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் பாஜக ஏஜெண்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இறுதிக் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 142 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் 2- ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் லேசான சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தின் பாலி பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அங்கு லேசான மோதல் ஏற்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தி இருவரை கைது செய்தனர். அதேபோல, நடியா மாவட்டத்தில் உள்ள சப்ரா தொகுதியில் பூத் எண் 53ல் பாஜக முகவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது
மேற்கு வங்காள சட்டமன்ற இரண்டாவது கட்ட தேர்தலில் மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களை தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இன்று வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவில் வாக்களித்து, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, மேற்கு வங்கத்தின் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களித்து, தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது.- பிரதமர் மோடி எக்ஸ் பதிவு
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியும் அடங்கும். இதே தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை எதிர்கொள்கிறார். மேலும், நந்திகிராம் தொகுதியிலிருந்தும் மம்தா போட்டியிடுகிறார்.
மேற்கு வங்க தேர்தல் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவில் 3.22 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பங்கேற்று, 1,448 வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை தீர்மானிக்க உள்ளனர். போட்டியிடும் வேட்பாளர்களில் 1,228 பேர் ஆண்களும், 220 பேர் பெண்களும் உள்ளனர். 18 முதல் 19 வயதுக்குட்பட்ட 4.12 லட்சம் இளைஞர்கள் இடம்பெற்றுள்ளதால், முதல் முறையாக வாக்களிப்போர் உற்சாகத்துடன் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.