தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: மம்தா பானர்ஜியால் வடிவமைக்கப்பட்ட சிலையை அகற்றியது பாஜக அரசு

2017-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. இதனையொட்டி சால்ட் லேக் மைதானத்தின் முன் இந்த சிற்பம் நிறுவப் பெற்றது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, இங்கு பாஜக அரசு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனடிப்படையில், கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற சால்ட் லேக் மைதானத்தின் முன் இருந்த மம்தா பானர்ஜியால் வடிவமைக்கப்பட்ட சிற்பத்தை பாஜக அரசு நீக்கியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் கால்பந்து பிரபலமானது. கடந்த 2017-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. இதனையொட்டி சால்ட் லேக் மைதானத்தின் முன் இந்த சிற்பம் நிறுவப் பெற்றது.

இந்த சிற்பம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. அதற்கான காரணம் அந்த சிற்பத்தில் ஒரு வீரரின் உடல் இடுப்பிற்கு மேல் இருக்காது. இரண்டு கால்களில் இரண்டு பந்துகள் இருக்கும். இடுப்பு பகுதிக்கு மேல் உருண்டை வடிவத்தில் கால்பந்து இருக்கும். இதை பார்த்து சிலர் முணுமுணுத்தனர். சிலர் அருவருக்கத்தக்கதாக உள்ளது என்றனர்.

ஆனாலும், அந்த சிறப்பம் அங்கேயே இருந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில் பாஜக தலைவர்கள், இந்த சிலை அகற்றப்படும் என வாக்குறுதி அளித்தனர். தற்போது பாஜக அரசு அமைக்கப்பட்ட நிலையில் சிலை அகற்றப்பட்டுள்ளது.