கொல்கத்தா,
மேற்கு வங்களத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று, முதல்-மந்திரியாக சுவேந்து அதிகாரி கடந்த மே மாதம் பதவியேற்றார். புதிய அரசு பதவியேற்ற பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநருடன் நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாகும்.
மேற்கு வங்க அரசு ஜூன் 22 ஆம் தேதி தனது முதல் மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மாநிலத்தின் நிதியாதாரம், அதிக கடன் சுமை மற்றும் நிதி பற்றாக்குறையை உள்ளிட்ட முக்கிய பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி மேலாண்மை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதே வேளையில், இந்த சந்திப்பு குறித்து தனது முகநூல் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ள முதல்வர் சுவேந்து அதிகாரி, இது ஒரு "மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.