தேசிய செய்திகள்

நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் சுப்ரீம் கோர்ட்டு சென்றது மம்தா பானர்ஜி அரசு

அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டதற்கு எதிராக மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு சுப்ரீம் கோர்ட்டு சென்று உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த இணைப்பினை டிசம்பர் 31-ந் தேதிக்குள் செய்து முடித்து விட வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது. ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

வங்கி கணக்குகளுடனும், செல்போன் எண்களுடனும் ஆதார் எண்களை இணைப்பதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள மம்தா பானர்ஜி தன்னுடைய செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கப்போவது கிடையாது என கூறிவிட்டார். இந்நிலையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள மம்தா பானர்ஜி அரசு சுப்ரீம் கோர்ட்டு சென்று உள்ளது. மேற்கு வங்காள மாநில அரசின் மனுவை பிற வழக்குகளுடன் திங்கள் கிழமை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்கிறது.

தன்னுடைய செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மாட்டேன் என மம்தா பேசிய போது, என்னுடைய செல்போன் இணைப்பை வேண்டுமென்றால் துண்டிக்கட்டும். இது மத்திய அரசின் சதிதிட்டமாகும்.

என்னுடைய தொலைபேசி அழைப்புகளை பதிவிட முயற்சி செய்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை