தேசிய செய்திகள்

மேற்குவங்காள 2ம் கட்ட தேர்தல்: நாளை வாக்குப்பதிவு

மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 93.19 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்நிலையில், மேற்குவங்காள 2ம் கட்ட தேர்தலில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி எஞ்சிய 142 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி, நாளை காலை 7 மணிக்கு தொடக்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைய உள்ளது.

வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நிறைவடைந்துள்ளது. 2ம் கட்ட தேர்தலை அசம்பாவிதங்கள் இன்றி நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பாதுகாப்புப்பணியில் மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.