தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் பதிலுரைக்கு முன்பு சபாநாயகர் அறைக்குள் நடந்தது என்ன? கிரண் ரிஜிஜு பரபரப்பு தகவல்

40 முதல் 50 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம்பிர்லா அறைக்குள் ஆவேசமாக புகுந்தனர் என்று கிரண் ரிஜிஜு கூறினார்.

பாட்னா,

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம், மக்களவையில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், பாட்னாவில் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மக்களவைக்கு பிரதமர் வராதது பற்றி கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற திட்டமிடப்பட்ட நேரத்துக்கு முன்பு சுமார் 40 முதல் 50 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம்பிர்லா அறைக்குள் ஆவேசமாக புகுந்தனர். மிகவும் மோசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நானும் அங்கு இருந்தேன்.

எனவே, அவர்கள் வன்முறை நிகழ்த்த திட்டமிடப்பட்டு இருந்ததை புரிந்து கொண்டோம். அதனால் பிரதமர் சபைக்கு வராமல் இருப்பது நல்லது என்று முடிவு எடுத்தோம் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். அதிக எம்.பி.க்கள் வைத்துள்ளோம். சபைக்காவலர்களை வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களை வெளியேற்றி இருக் கலாம். ஆனால், அதை நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT