தேசிய செய்திகள்

ஆணாதிக்கத்தை ஒழிக்க கோரி நள்ளிரவில் இளம்பெண்கள் செய்த செயல்...!

வீதிகளை ஆக்கிரமித்த இளஞ்சிவப்பு புரட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று நள்ளிரவில், மாநகரின் பிரதான வீதிகளில் இளஞ்சிவப்பு நிற உடை அணிந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணி நடத்தினர். பெண்கள் பாதுகாப்பு, சுதந்திரம் ஆகியவற்றை வலியுறுத்தியும், ஆணாதிக்க மனப்பான்மைக்கு எதிர்ப்பு தெரிவித் தும் 300-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

கன்னட நாடக கலைஞரும், இலக்கிய எழுத்தாளருமான நூபுர் ஆசாதி தலைமையில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு பேர ணியில், கல்லூரி மாணவிகள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் எழுத்தாளர்கள், நாடக நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர். இரவு 8 மணி அளவில் சிவாஜிநகரில் உள்ள மகாத்மா காந்தி பூங்காவில் இருந்து பேரணி தொடங்கியது.

அங்கிருந்து புறப்பட்ட இளம்பெண்கள், கஸ்தூரிபா சாலை வழியாக கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி 'சுதந்திர பூங்கா' நோக்கி பேரணியாக சென்றனர். ஆண்களுக்கு மட்டுமல்ல, இரவில் பாதுகாப்பாக நடமாடும் உரிமை பெண்களுக்கும் உண்டு என்பதை உணர்த்தும் வகையில் இந்த பேரணி அமைந்திருந்தது.

இந்த பேரணியில் பங்கேற்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் ரோனிதா கூறுகையில், 'எனக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். எனது மகளுக்கு பாதுகாப்பான ஒரு எதிர்காலத்தை அமைத்து கொடுப்பது ஒரு தாயாக என் கடமை' என்றார். அதேபோல், 19 வயதான ஜனசினா என்ற இளம்பெண் கூறுகையில், 'பெண்ணியம் என்பது வெறும் உரிமைகளுக்கானது மட்டு மல்ல, அது சமூக, சமத்துவம் மற்றும் மாற்றத்திற்கான குரல்' என்றார்.

இரவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற சமூகத்தின் மனப்பான்மைக்கு சவால் விடும் வகையில், பெங்களூரு வீதிகளை இரவில் ஆக்கிரமித்த இந்த இளஞ்சிவப்பு புரட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT