திருவனந்தபுரம்,
கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களை கைப்பற்றியது. இதில் காங்கிரஸ் மட்டும் 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது.
அதே சமயத்தில் காங்கிரஸில் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி நிலவி உள்ளது. மூத்த தலைவரான ரமேஷ் சென்னி தலா, எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், கே.சி. வேணுகோபால் எம்.பி. ஆகியோர் முதல்-மந்திரி பதவி மீது குறி வைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கி ழமை) காலை 11 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வை யாளர்கள் முகுல் வாஸ்னிக், அஜய் மாக்கன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இதில் காங்கிரஸ் சார்பில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற 63 சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் தனித்தனியாக கருத்துகளை கேட்டறிவார்கள். பின்னர் இது தொடர்பான அறிக்கை கட்சி தலைமைக்கு சமர்பிக்கப்படும். மேலும் மேலிட பார்வையாளர்கள், காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்துவார்கள்.
இதையடுத்து மீண்டும் கூட்டம் கூடி, கட்சி மேலிடம் அறிவிக் கும் நபரை முதல்-மந்திரியாக எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய் வார்கள் என கூறப்படுகிறது. எனவே கேரளத்தில் முதல்-மந்திரி தேர்வில் இன்னும் சில நாட்கள் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும் என காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.