தேசிய செய்திகள்

கடந்த மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 12 சதவீதமாக உயர்வு

நாட்டின் பணவீக்கப் போக்கை முன்கூட்டியே கணிக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது.

புதுடெல்லி,

மொத்த விற்பனை பணவீக்கம் கடந்த மாதத்தில் 12 சதவீதமாக உயர்ந்தது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மொத்த விற்பனை பணவீக்கம் உயர்வு

சில்லறை சந்தைக்குப் பொருட்கள் வருவதற்கு முன்பு, உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் அளவில் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிடு வதே 'மொத்த விற்பனை விலை குறியீடு' ஆகும். இது நாட்டின் பணவீக்கப் போக்கை முன்கூட்டியே கணிக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது.

கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்த விற்பனை விலை பண வீக்கம் 12.29 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய மொத்த விற்பனை விலை குறியீட்டுத் தொடரில் இதுவே மிக உயர்ந்த அளவாகும்.

எரிபொருள் மற்றும் மின்சார பொருட்கள்

செப்டம்பர் மாதத்தில் இந்த பணவீக்கம் 11.39 சதவீதமாக இருந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரப் பொருட்களின் விலை 25.85 சதவீதத்தில் இருந்து 32.84 சதவீதமாகக் கடுமை யாக உயர்ந்ததே இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனிம எண்ணெய், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம்,

உணவுப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், ரசாயனங்கள், ஜவுளி மற்றும் ரப்பர் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவுப் பொருட்க ளின் பணவீக்கம் 8.26 சதவீதமாகவும், உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் 11.69 சதவீதமாகவும், கனிமங்க ளின் விலை உயர்வு 12.64 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

ரெப்போ வட்டியில் தாக்கம்

இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் தலைமைப் பொருளாதார நிபுணர் தேவேந்திர பந்த் கூறுகையில், மேற்கு ஆசிய நெருக் கடி காரணமாக எரிபொருள் விலை உயர்வு நீடிப்பதாகத் தெரிவித்தார். இருப்பினும், சர்வதேச அளவில் எரிசக்தி விலை குறைந்து வருவதால், நவம்பர் மாதத்தில் பணவீக்கம் சுமார் 11.5 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த வாரம் வெளியான தரவுகளின்படி, சில்லறை பணவீக்கம் 6.09 சதவீதமாக உயர்ந்துள்ளதால், டிசம்பர் 2-4 தேதிகளில் நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தில் வட்டி விகிதங்கள் மீண்டும் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ் நிறுவனம், ரெப்போ விகிதம் 5.75 சத வீதமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது.

SCROLL FOR NEXT