தேசிய செய்திகள்

நாட்டை ஏன் சீரழிக்கிறீர்கள்? அபிஜித் தீப்கேவிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நபரால் பரபரப்பு

மகாராஷ்டிராவில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்த அபிஜீத் தீப்கே, இன்று பிற்பகல் டெல்லி திரும்பினார்.

எஸ்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளது. மும்பை, பெங்களூரில் போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு டெல்லியில் போராட அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

கூச்சலிட்ட நபர்

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்த அபிஜீத் தீப்கே, இன்று பிற்பகல் டெல்லி திரும்பினார். அப்போது விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அபிஜித் தீப்கேவை நோக்கி ஒருவர் கூச்சலிட்டார். நாட்டை ஏன் சீரழிக்கிறீர்கள் என்று அபிஜித் தீப்கேவை பார்த்து கூச்சல் எழுப்பினார். இதற்கு தீப்கே புன்னகைத்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றார். அபிஜித் தீப்கேவை பார்த்து கூச்சலிட்ட நபரால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் தீப்கே கூறியதாவது: தேசியக் கொடியை ஏற்றுவது குற்றமா? ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியை ஏற்றியதற்காக அசுதோஷ், சவுரவ் ஆகியோர் 5 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் இதுபோன்று நடந்தது” என்று காட்டமாக கூறினார்.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்காக தடுப்புகளைத் தாண்டிச் சென்றதாகவும், நீதிமன்றம் விதித்த ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாகவும் கர்ப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிர்வாகிகளான அசுதோஷ் மற்றும் சவுரவ் தாஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர் . எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இந்தக் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT