புது டெல்லி,
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது ராகவ் சத்தா போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்றும், அவர் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் கட்சி தலைமை அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிகிறது.
நேற்று முதல் தனக்கு எதிராக ஒரே மாதிரியான மொழி மற்றும் வார்த்தைகளுடன் கூடிய குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருவதாகவும். மேலும் ஒரு பொய்யை 100 முறை திரும்ப திரும்ப சொன்னால், சிலர் அதை நம்பக்கூடும் என்பதாலேயே பதிலளிக்க முடிவு செய்தேன். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தன் மீது சுமத்திய மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யும்போது தான் மட்டும் அமர்ந்திருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய் என்றும், நாடாளுமன்றத்தின் சிசிடிவி காட்சிகளைச் சோதித்தால் உண்மை தெரியும் என்றும் அவர் என கூறியுள்ளார். மேலும் தலைமை தேர்தல் ஆணையரை நீக்கும் தீர்மானத்தில் தான் கையெழுத்திட மறுத்ததாக கூறப்படுவதையும் அவர் மறுத்துள்ளார்.
இது தொடர்ப்பாக எந்தவொரு கட்சி தலைவரும் முறைப்படியோ அல்லது தனிப்பட்ட முறையில் இந்த சம்பவம் குறித்து தன்னிடம் கேட்கவில்லை என்று தெரிவித்தார், மேலும் கட்சியின் 10 எம்பிக்களில் 6-7 பேர் அதில் கையெழுத்திடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அப்படியென்றால் இதில் என் தவறு என்ன? ஏன் எல்லா பழியும் என் மீது சுமத்தப்படுகிறது என கூறினார்.
நாடாளுமன்றத்திற்கு தான் சத்தம் போடவோ அல்லது அமளியில் ஈடுபடவோ செல்லவில்லை என்றும், மக்களின் பிரச்சினைகளை பேசவே செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.